IPL Auction - ஏலத்தில் வாங்கப்பட்ட மூன்று இலங்கையர்கள்

#IPL #Player #Auction #SriLankan #2026
Prasu
1 hour ago
IPL Auction - ஏலத்தில் வாங்கப்பட்ட மூன்று இலங்கையர்கள்

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள 19வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான சிறிய ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. இந்த சிறிய ஏலத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெதும் நிஸ்ஸங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 4 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான 2கோடி இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!