வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #wellawatte #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தையில் ரயில் மோதுண்டு வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடலோரமாக அமைந்துள்ள குறித்த ரயில் பாதையில் தனது மனைவியுடன் நடந்துச் சென்ற போது தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

விபத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 57 வயதுடைய இந்தியப் பிரஜை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!