ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டப் பேரிணி!

#SriLanka #Vavuniya #Protest #Media #journalists
PriyaRam
2 years ago
ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டப் பேரிணி!

ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் இன்று வவுனியாவில் போராட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

“இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத் தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் உயிர்களை நாம் இழந்துள்ளோம்.

அதற்கான நீதி மறுக்கப்பட்டநிலையில் இன்றும் நீதி கோரி போராடி வருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கம், ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன், வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 எனவே, ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!