யாழில் இடம்பெற்ற கோர விபத்து - ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!
#SriLanka
#Jaffna
#Death
#Police
#Accident
#Investigation
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.