மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்!
#SriLanka
#Mannar
#Tamil Nadu
#Tamil People
#Refugee
#TamilNadu Police
Mayoorikka
2 years ago
மன்னார், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (01) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், அவர்களை மீட்டு, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
விசாரணையின்போது அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே தாம் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.