ஷம்மி டி சில்வாவை இரகசியமாக சந்தித்த ரொஷான் ரணசிங்க!
ரொஷான் ரணசிங்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வாவை இரகசியமாக சந்தித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் ஆலோசகர் சுதத் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
ரொஷான் ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மிகவும் இரகசியமாக இரவு நேரத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு ரொஷான் ரணசிங்கவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அரசாங்கங்களுக்கு சவால் விடுத்த லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்றவர்கள் உயிரிழந்ததை நினைவுகூர்ந்த சுதத் சந்திரசேகர, ரொஷான் ரணசிங்க பாதையில் உயிரிழந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த வாரம் ஜனாதிபதி விக்ரமசிங்கவால் நீக்கப்பட்டதுடன், விளையாட்டுத்துறை அமைச்சின் பொறுப்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்ட பின்புலத்திலேயே இந்த ரகசிய சந்திப்பு தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் பல்வேறு சம்பவங்களை தன்னிச்சையாக ஏற்படுத்தி வருவதாக ஆளுங்கட்சியால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இந்த ரகசிய சந்திப்பு தொடர்பில் பல தரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.