பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் நடந்த நிகழ்வு

#SriLanka #people #War #sri lanka tamil news #Palestine #supporters #Gaza #nawalapitiya
Prasu
2 years ago
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் நடந்த நிகழ்வு

"பலஸ்தீனை வாழ விடுங்கள்" எனும் தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் நிலையில், நாவலப்பிட்டி சொய்சா கலே வீதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாகவும் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.

பலஸ்தீனத்துக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை உடனடியாக நிறுத்தி சுதந்திர பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டுமென இங்கு கையெழுத்திட வந்த மக்கள் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன, மத பேதமின்றி பெருமளவான மக்கள் இதன்போது கையொப்பமிட்டனர்.

இவ்வாறு திரட்டப்பட்ட கையெழுத்துகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 கடந்த மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலின் சில பகுதிகளில் ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிலவி வருகிறது. கடந்த ஒருவாரகாலமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!