விகாரையிலிருந்த 13 வயது பிக்கு காணவில்லை
#SriLanka
#Police
#Temple
#Buddha
#search
#sri lanka tamil news
#Monk
#Missing
Prasu
2 years ago
புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராம விகாரையில் உள்ள பயிற்சி பெற்ற 13 வயதான பிக்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போனவர் அமரகெதர தேவசிறி என்ற 13 வயதுடைய பிக்கு மாணவராவார். இவர் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி கோவின்ன ரட்டியால பிரிவேனாவில் கல்வி கற்க சென்ற நிலையில் விகாரைக்கு திரும்பவில்லை என விகாராதிபதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த பிக்கு தொடர்பான தகவல் கிடைத்தால் 034 228 2292, 077 515 5744, 078 594 395 என்ற இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு புலத்சிங்கள பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.