போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீண்டும் மோதிக்கொள்ளும் இஸ்ரேல் - ஹமாஸ் : 178 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#world_news
#War
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஏழு நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, காசா பகுதியில் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.
போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டதாக இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டிருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் கூறுகின்றன.
போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 178 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக பதிவாகியுள்ளது.
200 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



