மனித இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பான விசாரணைகளில் திருப்தியில்லை : ஹரித அலுத்கே!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மனித இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் திருப்தி அடைய முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மனித இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் முறையான கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா ஆரம்பேபொல வலியுறுத்தியுள்ளார்.