கிளிநொச்சி பரந்தன் மற்றும் உமையாள்புரம் பகுதிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை
#SriLanka
#Kilinochchi
#Rain
#Flood
#sri lanka tamil news
#Alert
#Umaiyalpuram
#Paranthan
Prasu
2 years ago
தற்போது கனகாம்பிகை குளம் 6 இஞ்சி அளவில் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று இரவு 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கனகாம்பிகை குளத்தில் நீரேந்து பிரதேசத்தில் கிடைக்குமாக இருந்தால் அதிகளவான நீர் வெளியேறக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது.
இந்நீர் கிளிநொச்சி குளத்தை வந்தடைந்து கிளிநொச்சி குளம் வான் பாய்ந்தால் பரந்தன் மற்றும் உமையாள்புரம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது,
எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.