இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

#India #PrimeMinister #Meeting #Israel #President #Dubai
Prasu
1 year ago
இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். 

விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதற்கிடையே, உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என குறிப்பிட்டார். 

இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

 இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!