மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
PriyaRam
2 years ago
மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுவரை இரவு 9 மணி வரை திறக்கப்படும் மதுபானசாலைகள் மேலும் சில மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கப்படும் என தெரிய வருகின்றது.

கலால்வரி திணைக்கள பரிசோதகர்களின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.