சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

#SriLanka #Arrest #sri lanka tamil news #Animal #Puththalam #illegal #Hunt
Prasu
2 years ago
சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடி பாரியளவில் இறைச்சி விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ஒருவர் புத்தளம் மஹக்கும்புக்கடவல - ரல்மத்கஸ்வேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹக்கும்புக்கடவெல ரத்மல்கஸ்வேச பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருடன் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது சுமார் 20 கிலோகிராம் மான் இறைச்சியுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட போது, வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள், 3 ரவைகள் 6 பாவிக்கப்பட்ட ரவைகள் உள்நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 5 கிலோ ஈய உருண்டைகள், 15 மான் கொம்புகள், 9 காட்டுப்பன்றி தலைகள், முள்ளம்பன்றியின் முற்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் மின்விளக்குகள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஏனைய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!