ஊடக அடக்குமுறை எதிர் கட்சி மீதான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது பிரித்தானியா!

#SriLanka #UnitedKingdom
PriyaRam
2 years ago
ஊடக அடக்குமுறை எதிர் கட்சி மீதான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது பிரித்தானியா!

2024 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலைதீவுகள் தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இலங்கையும் அதில் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளின் தேர்தல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அன்னே-மேரி ட்ரெவெலியன் இதனை தெரிவித்தார்.

images/content-image/2023/11/1701406172.jpg

அனைத்து மக்களின் நலன்கள் மற்றும் ஒவ்வொரு தேசத்தின் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்காக பிரித்தானியா தொடர்ந்தும் செயற்படும் என்றும் கூறியுள்ளார்.

தெற்காசிய நாடுகளுடனான கலந்துரையாடலின் போது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் முக்கியத்துவத்தை தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!