கஜகஸ்தானின் முக்கிய நகரான அல்மாட்டியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#world_news
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கஜகஸ்தானின் முக்கிய நகரான அல்மாட்டியில் உள்ள தங்கும் விடுதியில் இன்று (30.11) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கட்டிடத்தின் அடித்தளத்தில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல வாரங்களுக்கு முன்பு விடுதியாக மாற்றப்பட்ட இந்த மூன்று மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக, அவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.