துவாரகா என அறிமுகமானவரின் உரை தொடர்பில் ஊடக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

#SriLanka #Bandula Gunawardana #Media
PriyaRam
2 months ago
துவாரகா என அறிமுகமானவரின் உரை தொடர்பில் ஊடக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண் ஒருவரின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டு நாட்டின் பாதுகாப்பு குறித்து வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

images/content-image/2023/11/1701236564.jpg

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை நாட்டுமக்கள் விரும்ப மாட்டார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு