வெலிப்பன்ன பகுதியில் இளம் பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

வெலிப்பன்ன பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையில் வசிக்கும் குறித்த யுவதியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹிஜ்ரா மாவத்தையில் வசிக்கும் மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமி நேற்று (27.11) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த விசாரணையில் அவர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போன சிறுமியின் செருப்பு ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள வெலிபன்ன கால்வாய் கரையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



