பதவி பறிப்பு விவகாரம் - சிறப்புரிமை மீறப்பட்டதாக குற்றம் சாட்டும் ரொஷான்!
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#Srilanka Cricket
PriyaRam
2 years ago
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சிறப்புரிமை தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பினார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்காமையினால் தாம் பதவி நீக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு, அரச ஊடகமொன்றுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், இல்லாத விடயங்களை குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளால் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.