வரலாறு காணாத எழுச்சி: பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்தன கிளிநொச்சி துயிலுமில்லங்கள்!
#SriLanka
#Death
#Kilinochchi
#Vanni
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது 2 மணிநேரத்திற்கு மேல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனால் வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மக்கள் திரண்டமையால் கடும் வாகன நெரிசலும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காணப்பட்டது.



