வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!
இந்த வாரத்தில் சுகயீன விடுப்பு தொடர்பில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் குணசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவியதுடன், பொறியியலாளர் சங்கம் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரசபையுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை என அந்த அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான கோரிக்கைகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், சுகயீன விடுமுறையைப் புகாரளித்தால் மேலதிக பணியாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.