சுகாதார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

#SriLanka #Health Department
PriyaRam
2 years ago
சுகாதார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி டொக்டர் பாலித மஹிபால எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்தியர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியையும் சர்வதேச சுகாதார நிறுவனங்களில் பல பதவிகளையும் வகித்துள்ளார்.

தற்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியை ஜனக ஸ்ரீ சந்திரகுப்த வகித்து வருகிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!