கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (16.11) இடம்பெற்றது.
இதன்படி புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 9 கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்களுக்கு இதன்போது மதிப்பளிக்கப்பட்டது.

இதன்போது பாண்ட் வாத்திய இசையுடன் மலர் தூவிஅழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள் தமது உறவுகளை நினைவு கூர்ந்து பொது உருவபடத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், மாவீரர் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் நினைவாக நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைத்தார்.
