கட்டாரின் இராஜதந்திரம் வெற்றியளிக்குமா? இஸ்ரேல் பணய கைதிகள் விடுதலையாவார்களா?

கட்டாரின் மத்தியஸ்தர்கள் ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மூன்று நாட்கள் போர் நிறுத்தத்துக்கு பதிலாக காசாவில் இருந்து சுமார் 50 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேல் சிறையில் இருந்து சில பாலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை இஸ்ரேல் விடுவிக்கும் எனவும், காசாவிற்குள் அனுமதிக்கும் மனிதாபினமான உதவியின் அளவை அதிகரிக்கும் எனவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இஸ்ரேல் தரப்பினரால் விடுவிக்கப்படவுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை, காசாவில் பணயக் கைதிகளாக உள்ள 200க்கும் அதிகமானோரை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து தாம் சிறிது நம்பிக்கையுடன் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.



