இலங்கை கிரிக்கெட் விசாரணையிலிருந்து விலகினார் மற்றுமொரு நீதிபதி!

#SriLanka #Srilanka Cricket
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட் விசாரணையிலிருந்து விலகினார் மற்றுமொரு நீதிபதி!

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு டி.என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1700120237.jpg

இதன்படி, மனு விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழு ஒன்றை பெயரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்னவுக்கு உரிய மனு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!