நீதிக்காக சிறந்த எதிர்காலத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப உறுதி எடுக்க வேண்டும்!
ஒற்றுமை மற்றும் உண்மையின் பண்புகளை புதிய பரிமாணத்திற்கு உயர்த்தி, இந்தத் தீபாவளித் திருநாளில் பெறும் ஒளியின் மூலம் ஒருவருக்கொருவர் மற்றும் நீதிக்காக ஒரு சிறந்த எதிர்காலத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மோசடி, ஊழல், திருட்டு ஆகியவற்றை நிராகரித்து, உண்மைக்காகவும் நன்மைக்காகவும் நின்று, மக்களின் எதிர்காலத்திற்காக நேர்மையாகவும், உண்மையாகவும், மனிதப் பண்புடனும், பரிபூரண இதயசுத்தியுடனும் உழைக்கும் தலைவர்களிடமிருந்து நம்நாட்டின் அரசியலை ஒளிரச் செய்வதற்கு இந்தத் தீபாவளியின் தீபங்கள் காரணமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் அனைவரும் வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சரியான பாதைக்கான வழிகாட்டியாக இந்த தீபாவளியின் தீபங்கள் விளக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.