திறைசேரிக்கு 925 மில்லியன் ரூபாய் வழங்கிவைப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச ஆரம்ப கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான 05 நிறுவனங்களின் வருடாந்த ஈவுத்தொகையாக 925 மில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையிடமிருந்து 350 மில்லியன் ரூபாவும், லங்கா பொஸ்பேட் கம்பனி லிமிடெட்டிடமிருந்து 300 மில்லியன் ரூபாவும், பிபிசி நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபாவும், தேசிய உப்பு நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபாவும், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.