இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலான பிரேணை நிறைவேற்றப்பட்டது!

#SriLanka #Srilanka Cricket #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலான பிரேணை நிறைவேற்றப்பட்டது!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றிஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை வங்கிக் கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் முயற்சிப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில், அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீடிக்க வேண்டும் என்றும்,இதை பிரேரணையாக சமர்ப்பித்து தானே நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதற்கமைய ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை நீக்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!