யாழ் போதனா வைத்தியசாலையில் உரிமைக்கோரப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள 03 சடலங்கள்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ் போதனா வைத்தியசாலையில் உரிமைக்கோரப்படாத நிலையில், 03 சடலங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் பிரதிபணிப்பாளர் யமுனா நந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலமும், கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த திருமதி கிரிஷாந்தன் எனும் பெண்ணின் சடலமும், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி விடுதி இலக்கம் 08இல் உயிரிழந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த நல்லூராஜ் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.