மாணவர்களின் கதவடைப்பு போராட்டம் - அறிக்கையை மீளப்பெறும் யாழ்.பல்கலை ஆசிரிய சங்கம்!

#SriLanka #Protest #students #University
PriyaRam
2 years ago
மாணவர்களின் கதவடைப்பு போராட்டம் -  அறிக்கையை மீளப்பெறும் யாழ்.பல்கலை ஆசிரிய சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2023/11/1699523921.jpg

இதன்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்கு மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அதற்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை முதல் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!