சட்டத்தரணி சுவாஸ்திகா உரை விவகாரம் - யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்!

#SriLanka #Jaffna #Protest #students #University
PriyaRam
2 years ago
சட்டத்தரணி சுவாஸ்திகா உரை விவகாரம் - யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் "நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்" என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார். 

images/content-image/2023/11/1699513432.jpg

இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்குதலின் காரணமாக கைவிடப்பட்டது. 

இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இன்று காலை மாணவர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!