கொள்ளை மற்றும் குடும்ப ஆதிக்கத்தினாலேயே வீழ்ச்சியடைந்தது கிரிக்கெட்!

#SriLanka #Parliament #Sajith Premadasa #Srilanka Cricket
PriyaRam
2 years ago
கொள்ளை மற்றும் குடும்ப ஆதிக்கத்தினாலேயே வீழ்ச்சியடைந்தது கிரிக்கெட்!

குடும்ப ஆதிக்கத்தினால் தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள், இன்றைய தினத்திற்குள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி, கிரிக்கெட் விளையாட்டின் எதிர்க்காலம் தொடர்பான முறையான வரைப்படமொன்று தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெடிலிருந்து அரசியலை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல்வாதிகள், போதைப்பொருள் மாபியாக்கள், பாதாள உலக குழுவினரின் தலையீடு இல்லாத கிரிக்கெட்டை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

images/content-image/2023/11/1699510318.jpg

இதற்கான நடவடிக்கையை 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஊழல் நிறைந்த நிர்வாக சபை, தூரநோக்கற்ற செயற்பாடு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், நட்பு மற்றும் குடும்ப ஆதிக்கத்தினால் தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது கிரிக்கெட் சபை மீதான அரசியல் அழுத்தத்தினால் தான் கிரிக்கெட் விளையாட்டு மோசமடைந்துள்ளதாக உலகத்திற்கு கூறியுள்ளார்கள் ஆனால் இந்த கருத்து பொய்யென அனைவரும் ஒன்றிணைந்து ஐ.சி.சி.க்கும், சர்வதேச கிரிக்கெட் சபைக்கும் காண்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளை மற்றும் ஊழல் காரணத்தினால்தான் கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் இதிலிருந்து தப்பிக்கவே அரசியல் அழுத்தம் இடம்பெற்றதாக இவர்கள் கூறுகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!