யாழில் மர்ம நபரால் குறி வைக்கப்படும் செல்வந்தர்கள்!

#SriLanka #Jaffna
PriyaRam
2 years ago
யாழில் மர்ம நபரால் குறி வைக்கப்படும் செல்வந்தர்கள்!

யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது, உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள், அந்த செய்வினையை உடனே அகற்ற வேண்டும் இதனை தனது ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டதாகவும், தான் ஒரு மாந்திரீகவாதி தன்னால் மட்டுமே அதனை அகற்ற முடியும் எனக் கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரவைத்து பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

images/content-image/2023/11/1699509067.jpg

இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு அவரின் பெயர் விபரங்கள் தெரியாததாலும், சிலர் தமது அந்தஸ்து கருதி முறைப்படு செய்ய முன் வராததாலும் அந்நபரின் ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டே செல்வதாகவும், எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!