இடைநிறுத்தப்பட்டது வாகன இறக்குமதி!

#SriLanka #Import #Ranjith Siambalapitiya #vehicle
PriyaRam
2 years ago
இடைநிறுத்தப்பட்டது வாகன இறக்குமதி!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1699505594.jpg

வாகன இறக்குமதி தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்களின் தேவை, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!