கனடாவில் பனி நீரில் மூழ்கி மூன்று பேர் மரணம்
#Death
#Canada
#children
#world_news
#water
#Rescue
Prasu
2 years ago
கனடாவில் பணி நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சஸ்கட்ச்வான் பகுதியில் அமைந்துள்ள ஆம்போல்ட் ஏரியில் கடந்த சனிக்கிழமை (5) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பனி கட்டிகளினால் மூடப்பட்டிருந்த குளம் ஒன்றில் ஐந்து பேர் மேல் பகுதியில் நின்றிருந்த வேளையில், சிறுவர்களில் இருவர் திடீரென பனி பாறை உடைந்து நீருக்கு அடியில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்பதற்கு இரண்டு ஆண்கள் முயற்சித்த போது அவர்களும், பெண்ணும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இவ்வாறு பணி நீரில் மூழ்கிய ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இரண்டு ஆண்களும் ஒரு சிறுமியும் சம்பவத்தில் உயிர் இழந்துள்ளார் உயிரிழந்துள்ளனர்.