இளம் குடும்பப் பெண் கழுத்தறுத்துக் கொலை!

#SriLanka #Police #Murder #Investigation
PriyaRam
2 years ago
இளம் குடும்பப் பெண் கழுத்தறுத்துக் கொலை!

கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கே.ஏ.சஞ்சீவனி எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார் எனவும், அந்தப் பெண் கணவரின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன் கணவரின் வீட்டில் வசித்து வந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

images/content-image/2023/11/1699442820.jpg

 உயிரிழந்த பெண் வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவரின் தாயார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு அறிவித்தார். 

அதையடுத்துப் பொலிஸார் அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர். பூகொட நீதிமன்ற பதில் நீதிவான் கமல் சம்பந்த பெரும சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டார். 

சடலத்தை வத்துபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்ட நீதிவான், அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார். 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் (கணவரின் சகோதரன்) கொலைக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளார் எனவும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கிரிந்திவெல பொலிஸார் குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!