கசினோ உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறதா? உண்மையை வெளியிட்ட அமைச்சர்!
#SriLanka
#Parliament
#Ranjith Siambalapitiya
PriyaRam
2 years ago
கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபானம் உள்ளிட்ட நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதிக வரிகளை விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.