இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நாடாளுமன்றில் எட்டப்பட்ட தீர்மானம்!
#SriLanka
#Parliament
#Srilanka Cricket
PriyaRam
2 years ago
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையை கலைத்து இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

அதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிரகாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அது தொடர்பில் முடிவெடுப்பதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.