சீன தூதுக் குழுவினர் யாழிற்கு விஜயம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று (07.10) நயினாதீவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்விஜயத்தின்போது சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும், நயினாதீவு மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும் சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளன.
நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.