இடைக்கால கிரிகெட் குழுவை நியமிப்பது தொடர்பில் ஆராய உபக்குழு நியமனம்!
இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்தி, இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (06.11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கிரிக்கெட் குழு நியமனம் மற்றும் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை எனவும், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மூலம் ஜனாதிபதி இதனை அறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நேற்று இடம்பெற்றஅமைச்சரவைக் கூட்டத்தில், கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர்களான திரன் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் அடங்குவர்.