இலுப்பைக்குளம் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை : கேள்விக்குறியாகும் தமிழர்களின் எதிர்காலம்
திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் இன்று (06.11) புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் ஆரம்பத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கட்டுமானப் பணிகளுக்கு எதிராக ஆளுநர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும் ஆளுநரின் தடையுத்தரவையும் மீறி கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு எதிராக மக்கள் கடந்த செப்டம்பர் மாதம் பாரிய ஆரப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும் அந்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை ஒன்றும் நடப்பட்டது. இந்த சூல்நிலையில் இன்றைய தினம் காலை வேளையில் குறித்த புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.