அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விளாடிமிர் புட்டின்!

#SriLanka #Russia #Lanka4 #Putin #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விளாடிமிர் புட்டின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவ்வாறு அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் 2030 வரை அதிகாரத்தில் இருப்பதற்கு வழிசெய்யும் என ஆறு  ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விளாடிமிர் புடினுக்கு 1999 ஆம் ஆண்டின் கடைசி நாளில் போரிஸ் யெல்ட்சினால் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது மற்றும் ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு வேறு எந்த ரஷ்ய ஆட்சியாளரையும் விட நீண்ட காலம் ஜனாதிபதியாக பணியாற்றியுள்ளார்.  

அக்டோபர் 7 அன்று ரஷ்ய ஜனாதிபதிக்கு 71 வயதாகிறது. கருத்துக் கணிப்புகள் விளாடிமிர் புடின் ரஷ்யாவிற்குள் 80% அங்கீகாரம் பெற்றதாகக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!