மயிலத்தமடுவில் புதிய சோதனைச் சாவடி!
#SriLanka
#Batticaloa
#Police
PriyaRam
2 years ago
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார்.
குறித்த மேச்சல்தரைப் பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக அமைக்கப்பட்டு அதனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சென்று பார்வையிட்டு பொலிசாரை கடமைக்கு அமர்த்தி கடமைகளை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.