கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் இந்திய அமெரிக்க கூட்டு நிகழ்ச்சி நிரல்!

#India #SriLanka #Gotabaya Rajapaksa #Protest
PriyaRam
2 years ago
கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் இந்திய அமெரிக்க கூட்டு நிகழ்ச்சி நிரல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என பரபரப்பான தொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார.

‘அறகலயவின்’ பின்னணியில் இந்தியாவின் றோவும், அமெரிக்காவின் சி.ஐ.ஏயுமே செயற்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டிருந்த வேளைகளில் இந்தியா உதவி இருந்தாலும், அதன் மூலம் தனக்கு உபாயமார்க்கமாக தேவையானவற்றை அந்நாடு பெற்றுக் கொண்டுள்ளது என்பதே உண்மை.

தமது நாட்டு இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இந்தியா பயன்படுத்திக்கொண்டது. 

பண்டைய காலத்தில் 17 தடவைகள் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

images/content-image/2023/11/1699269414.jpg 

அந்த 17 சந்தர்ப்பங்களிலும் போரிட்டு இழந்ததை இலங்கையர்கள் மீளப்பெற்றுள்ளனர். எனவே இலங்கையை காலனித்துவ நாடாக வைத்திருப்பது இலகுவான காரியம் அல்ல என்பது இந்தியர்களுக்கு தெரியும்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி வீழ்வதற்கு இந்தியா உதவி வழங்கியது என்பது உறுதி. ஊர் பகுதிகளில் வட்டி வியாபாரிபோல் பொருளாதாரத்தை விழ வைத்தே இந்தியா உதவி செய்தது. 

கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி விட்டு ,ரணிலை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இந்தியா தலையிட்டதற்கான சாட்சிகள் உள்ளன.

இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் செயற்படுகின்றன. ‘குவாட்’ அமைப்பின் தேவைதான் கோட்டாவை விரட்டிவிட்டு, ரணிலை கொண்டுவருவது. 

அதனை தான் இந்தியா செயற்படுத்தியுள்ளது. தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ரணில் தான் பொருத்தமான நபர் என்பது இந்தியாவுக்கு தெரியும்.

ரணிலை இந்தியா விரும்பவில்லை என்பதெல்லாம் இந்த கேமின் ஓர் அங்கமாகும். இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ கூட இந்திய, அமெரிக்காவின் கூட்டு நிகழ்ச்சி நிரலாகும்” எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!