டயானா கமகே தாக்குதல் விவகாரம்: விசாரணை குழுவிற்கு அழைப்பு
#SriLanka
#Parliament
#Investigation
#Attack
#Crime
Mayoorikka
2 years ago
ஒக்டோபர் 20 திகதி பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (06) அழைக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவத்தின் போது குழுவின் அருகில் இருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவும் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பகீர் மார்க்கர் மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.