லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்!
#SriLanka
#prices
#government
#Laugfs gas
#Gas
Mayoorikka
2 years ago
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும்.