என்னுடன் விளையாடாதீர்கள் - தபால் நிலைய தலைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்!

#SriLanka #NuwaraEliya #Ranil wickremesinghe #Warning
PriyaRam
2 years ago
என்னுடன் விளையாடாதீர்கள் - தபால் நிலைய தலைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்!

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் மேற்குறித்தவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

images/content-image/2023/10/1699246482.jpg

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக நடத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாதது தொடர்பில் வினவியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு கட்டடத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் வழங்கிய பணிப்புரைகளை நடைமுறைப்படுத்த தபால்மா அதிபர் இணங்காவிட்டால், மற்றுமொருவரை தேட வேண்டியிருக்கும் என, தபால்மா அதிபருக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!