தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை விரும்பும் மக்கள்!
#SriLanka
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
Thamilini
2 years ago
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ அரசாங்கத்திற்கு 46 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
கணக்கெடுப்பின்படி தற்போதைய அரசாங்கத்திற்கு 17 வீதமான மக்களின் அங்கீகாரமும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்திற்கு 29 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 வீதமான அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பனர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
உலகில் எங்கும் வாழும் இலங்கையர்களை சேகரித்து கணக்கெடுத்தால், அவர்கள் தேசியத்தை எப்படி விரும்புகிறார்கள் என்பதையும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன எனக் கூறினார்.