லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய திருத்தத்திற்கமைய, லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தேநீர், பால் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.