யாருடைய கைகளும் சுத்தம் இல்லை - பராக் ஒபாமா!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரைப் பற்றிய "முழு உண்மையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மோதலுக்கு அனைவருக்கும் சில பொறுப்புகள் இருப்பதாக கூறிய அவர், யாருடைய கைகளும் சுத்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இரண்டும் பயங்கரமானது என விமர்சித்த அவர், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழி இந்த உண்மைகளை ஒப்புக்கொள்வதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.